SuperTopAds

தமிழீழ விடுதலை புலிகளை பயங்கரவாதிகள் பட்டியலில் இணைத்தது ஐரோப்பிய ஒன்றியம்..!

ஆசிரியர் - Editor I
தமிழீழ விடுதலை புலிகளை பயங்கரவாதிகள் பட்டியலில் இணைத்தது ஐரோப்பிய ஒன்றியம்..!

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் ஐரோப்பிய ஒன்றியம் இணைத்து 21 பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலை வெளியிட்டிருக்கின்றது. 

பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் தனிநபர்கள், குழுக்கள் மற்றும் அமைப்புகளை தடை செய்யப்பட்ட பயங்கரவாத பட்டியலாக ஐரோப்பிய ஒன்றியம் வெளியிடுவது வழக்கம்.

இந்நிலையில் இவ்வருடத்திற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், குறித்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள 21 பயங்கரவாத அமைப்புக்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் 

அமைப்பின் பெயரும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது.இலங்கையில் கடந்த 30 வருடங்களாக நடைபெற்று வந்த உள்நாட்டு யுத்தத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக செயற்பட்ட 

தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதியுடன் மெளனிக்கப்பட்டன.2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி 

அமெரிக்காவின் இரத்தக் கோபுரங்களின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து அதே ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தால் 1373/2001 தீர்மானத்தின் கீழ் குறித்த பட்டியல் 

முதன் முதலாக வெளியிடப்பட்டது.அதனைத் தொடர்ந்து உறுப்பு நாடுகளின் பயங்கரவாதம் தொடர்பான வழக்கமான தகவல் பரிமாற்றங்களின் அடிப்படையில் குறித்த பட்டியல் 

சீரான இடைவெளியில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.அதனடிப்படையில், ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்தினால் பயங்கரவாத அமைப்பாக பெயரிடப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் 

பெயர் இம்முறை வெளியிடப்பட்டிருக்கும் பட்டியலிலும் உள்ளடக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பு பட்டியலில் இருந்து நீக்குமாறு 

பல நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.கடந்த ஆண்டு இந்தியாவும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் தொடர்ந்தும் உள்ளடக்கியது.