கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இரு பேருந்துகள் நேருக்கு நோ் மோதி விபத்து..! 23 போ் படுகாயம்..

ஆசிரியர் - Editor
இரு பேருந்துகள் நேருக்கு நோ் மோதி விபத்து..! 23 போ் படுகாயம்..

கினிகத்தேனை பகுதியில் இன்று காலை இரு பஸ்கள் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானதில் 23 போ் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனா். 

இன்று காலை 7.30 அளவில் இந்த விபத்து இடம்பெற்றிருப்பதாக கினிகந்தேனை பொலிஸார் குறிப்பிட்டனர். காயங்களுக்குள்ளாகிய அனைவரும் வட்டவளை, நாவலப்பிட்டி வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

ஹட்டன் – கண்டி பிரதான வீதியில் ஹட்டனிலிருந்து கண்டிநோக்கி சென்ற தனியார் பஸ்ஸிம், கண்டியிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற பஸ்ஸிம் நேருக்கு நேர் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Radio
×