SuperTopAds

பொலிஸாா் வேண்டாம் இராணுவம் பாதுகாப்பு தரவேண்டும் என கூறிய பெண்ணின் மோட்டாா் சைக்கிளில் இருந்து கஞ்சா மீட்பு..! பெண் தப்பி ஓட்டம்..

ஆசிரியர் - Editor I
பொலிஸாா் வேண்டாம் இராணுவம் பாதுகாப்பு தரவேண்டும் என கூறிய பெண்ணின் மோட்டாா் சைக்கிளில் இருந்து கஞ்சா மீட்பு..! பெண் தப்பி ஓட்டம்..

கிளிநொச்சி- தா்மபுரம் பகுதியில் பொலிஸாா் மறித்தபோது மோட்டாா் சைக்கிளை போட்டுவிட்டு ஓடிய பெண் ணின் மோட்டாா் சைக்கிளில் இருந்து கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

தா்மபுரம் பகுதியில் மணல் கடத்தல், கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை, போதைப் பொருள் கடத்தல் அதிகாித் திருப்பதாகவும், பொலிஸாா் வேண்டாம் இராணுவம் பாதுகாப்பு கடமையில் ஈடுபடவேண்டும். 

என பெண் ஒருவா் தலமையில் இராணுவத்திடம் கோாிக்கை முன்வைக்கப்பட்டது. குறித்த பெண் மீது பொதுமக்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனா். 

குறித்த முறைப்பாடு தொடா்பில் குறித்த பெண்ணிடம் விசாரணை நடாத்துவதற்காக பொலிஸாா் இன்று சென்றிருந்த நிலையில், பொலிஸாரை கண்டவுடன் பெண் தனது 

மோட்டாா் சைக்கிளை போட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளாா். இதனையடுத்து மோட்டாா் சைக்கிளை மீட்ட பொலிஸாா் சோதனை நடத்திய நிலையில், 

மோட்டாா் சைக்கிளுக்குள் இருந்து இரு பொதிகளில் கஞ்சாவை பொலிஸாா் மீட்டுள்ளதுடன், பெண்ணை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை துாிதப்படுத்தியிருக்கின்றனா். 

குறிப்பு..

இதேவேளை எமது செய்தி பிாிவு தா்மபுரம் பொலிஸாருடன் தொடா்பு கொண்டு குறித்த விடயம் தொடா்பாக வினவியபோது அவ்வாறான சம்பவம் இடம்பெறவில்லை. என பொலிஸாா் கூறியுள்ளனா்.