SuperTopAds

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவின் அதிரடி தீா்மானம்..! பின்தங்கிய கிராம மக்களுக்காக 15.03 மில்லியன் அமொிக்க டொலா்..

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவின் அதிரடி தீா்மானம்..! பின்தங்கிய கிராம மக்களுக்காக 15.03 மில்லியன் அமொிக்க டொலா்..

இலங்கையில் உள்ள பின்தங்கிய கிராமங்களை நகரங்களுடன் இணைப்பதற்கு 15.03 மில்லியன் அமொிக்க டொலா் பெறுமதியில் 600 பேருந்துகளை கொள்வனவு செய்யவுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளாா். 

இது குறித்து ஜனாதிபதி எடுத்துள்ள தீா்மானமாவது,  இந்திய கடன் உதவியுடன் 15.03 மில்லியன் அமெரிக்க டொலர்களை பயன்படுத்தி 50 தொடக்கம் 54 இருக்கைகளைக் கொண்ட 400 புதிய பஸ்களையும், 

32 – 35 இருக்கைகளைக் கொண்ட 100 புதிய பஸ்களையும் கொள்வனவு செய்வதற்காக முன்னைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் வாரீயத்தினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

எனினும், இலங்கை போக்குவரத்து சபை, செயல்திறன் மிக்கதும் தேவையின் அடிப்படையிலானதுமான சேவையை வழங்குவதற்காக, தனது சேவைத் தேவையை மீள் மதிப்பபீடு செய்துகொண்டதற்கு அமைய

 தொலைதூர கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இடையிலான மற்றும் கிராமங்களை இணைக்கும் குறுக்குப் பாதைகளுக்கான போக்குவரத்துக்கே பேரூந்துகள் தற்போது அவசிய தேவையாக 

உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக - இந்திய கடன் உதவியுடன் கொள்வனவு செய்வதற்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்த பேரூந்துகளுக்குப் பதிலாக, 

தற்போது, 30 – 35 இருக்கைகள் கொண்ட புதிய 500 பேரூந்துகளையும், மற்றும் 42 – 45 இருக்கைகள் கொண்ட புதிய 100 பேரூந்துகளையும் கொள்வனவு செய்வதற்கு 

பொதுமக்கள் போக்குவரத்து சேவை முகாமைத்துவ அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சர்கள் வாரீயம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.