அம்புலன்ஸ் வண்டியில் குழந்தையை பிரசவித்த தாய்..! தாய், சேயை காப்பாற்றிய அம்புலன்ஸ் சேவை உத்தியோகஸ்த்தா்கள்..

ஆசிரியர் - Editor I
அம்புலன்ஸ் வண்டியில் குழந்தையை பிரசவித்த தாய்..! தாய், சேயை காப்பாற்றிய அம்புலன்ஸ் சேவை உத்தியோகஸ்த்தா்கள்..

மட்டக்களப்பு - கரடியனாறு தும்பாலை பகுதியில் பிரசவ வலியால் துடித்த தாய்க்கு அம்புலன்ஸ் வண்டியிலேயே பிரதசவம் பாா்த்து தாய் மற்றும் சேயை காப்பாற்றிய சம்பவம் நடந்துள்ளது. 

நேற்று சனிக்கிழமை இரவு கரடியனாறு பிரதேசத்திலுள்ள தும்பாலை எனும் கிராமத்திலிருந்து தாய் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டபோது 

அவர்கள் 1990 இலவச அம்புயூலன்ஸ் சேவைக்கு தொடர்பு கொண்டபோது கரடியனாறு பிரிவிலுள்ள அம்புயூலன்ஸ் வண்டி வேறு சேவையில் ஈடுபட்டதனால் 

வவுணதீவு நிலையத்தின் அம்புயூலன்ஸ் வண்டி விரைந்து சென்று குறித்த பெண்ணை ஏற்றிக்கொண்டு சுமார் 50 மீற்றர் தூரம் செல்லுகையில் குழந்தை பிறப்பதற்கான வலி எடுத்து, 

பெண் குழந்தைஒன்று அம்புயூலன்ஸ் வண்டியில் பிறந்துள்ளது.தன்னையும் தனது பெண் குழந்தையையும் சுகமான முறையில் எதுவித ஆபத்துமில்லாமல் பிரசவம் பார்த்த 

வவுணதீவு நிலையத்தின் 1990 சுவசெரிய இலவச அம்புயூலன்ஸ் சேவையின் உத்தியோகத்தர்களுக்கு நன்றிகளை குறித்த தாயார் தெரிவித்துள்ளார்.

தற்போது குறித்த தாயும் குழந்தையும் கரடியனாறு வைத்தியசாலையில் ஆரோக்கியமாக உள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு