யாழ்.குருநகா் பகுதியில் இராணுவம், பொலிஸ், விசேட அதிரடிப்படை குவிப்பு..! வீடு வீடாக சோதனை, ஜனாதிபதி கோட்டா ஆட்சியில் முதல் சோதனை..

ஆசிரியர் - Editor I
யாழ்.குருநகா் பகுதியில் இராணுவம், பொலிஸ், விசேட அதிரடிப்படை குவிப்பு..! வீடு வீடாக சோதனை, ஜனாதிபதி கோட்டா ஆட்சியில் முதல் சோதனை..

யாழ்.குருநகா் பகுதியில் பெருமளவு இராணுவம், விசேட அதிரடிப்படையினா் மற்றும் பொலிஸாா் குவிக்கப்பட்டு இன்று காலை பாாிய சுற்றிவளைப்பு தேடுதல் நடாத்தப்பட்டிருக்கின்றது. 

புதிய அரசு பதவியேற்றதன் பின்னர் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்கமைய தேசிய பாதுகாப்பினை கருத்திற்கொண்டு யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று அதிகாலை 5.30 மணி தொடக்கம் காலை 6 மணி வரை 

குருநகர் பகுதியில் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன.பொலிஸார், சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து 

இந்த சோதனை நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.இந்த நடவடிக்கையின்போது எவரும் கைது செய்யப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை நேற்று தெல்லிப்பளை பகுதியிலும் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர். 

அதிலும் யாரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன், சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எவையும் மீட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு