SuperTopAds

களத்தில் இறங்கி சமூக விரோதிகளை கட்டுப்படுத்துங்கள்..! மக்கள் கோரிகையை ஏற்று களத்தில் இறங்கிய இராணுவம்.

ஆசிரியர் - Editor I

கிளிநொச்சி- கல்லாறு பகுதியில் தொடர்ச்சியாக கசிப்பு உற்பத்தி, விற்பனை மற்றும் சட்டத்திற்கு மாறான செயற்பாடுகள் இடம்பெறும் நிலையில் பொலிஸார் நடவடிக்கை எடுக்க தவறியுள்ளார்கள்.

இந்நிலையில் கோபமடைந்த மக்கள் இணைந்து இராணுவ அதிகாரிகளை சந்தித்து தமது பகுதியில் கசிப்பு மற்றும் சட்டவிரோத தொழில்களை தடுத்து நிறுத்துமாறு கோரியிருந்தனர்.

இதனை ஏற்றுக் கொண்டிருக்கும் இராணுவத்தினர் உடனடியாக களத்தில் இறங்கி சமூக விரோதிகள், குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.