SuperTopAds

நித்தியானந்தா ஆச்சிரமத்திற்குச் சென்ற மருத்துவரும், பெண்ணும் எங்கே..?

ஆசிரியர் - Editor II
நித்தியானந்தா ஆச்சிரமத்திற்குச் சென்ற மருத்துவரும், பெண்ணும் எங்கே..?

நித்தியானந்தா ஆசிரமத்துக்கு சென்ற தேனியைச் சேர்ந்த மருத்துவரும் அவருடன் சென்ற 17 வயதுப் பெண்ணும் ஒருமாதத்துக்குப் பிறகும் வீட்டுக்குத் திரும்பவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேனி காவல்துறை கண்காணிப்பாளரிடம் குறித்த புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

மதுரையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணிபுரியும் டாக்டர் மனோஜ் என்பவரும் அவரது சகோதரி மகளான 17 வயதுப் பெண் ஒருவரும் நித்யானந்தா ஆசிரமத்தின் சார்பில் நடத்தப்படும் யோகாசன வகுப்புகளுக்கு செல்வது வழக்கமாக இருந்துள்ளது.

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன் திருவண்ணாமலையில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்துக்கு சென்ற அவர்கள் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து மனோஜின் பெற்றோரான காந்தி – ஈஸ்வரி தம்பதி நித்தியானந்தா ஆசிரமத்திற்கு சென்றபோது, ஆசிரம ஊழியர்கள் அவர்களை உள்ளே அனுமதிக்காததால் ஆசிரம வாசலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து திருவண்ணாமலை பொலிசார் பெற்றோர்களிடமும், ஆசிரம ஊழியர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது டாக்டர் மனோஜும், 17 வயதுப் பெண்ணும் பெங்களூருவில் இருப்பதாக ஆசிரமத் தரப்பில் கூறப்பட்டதாகவும் பெற்றோருடன் அவர்களை தொலைபேசியில் பேச ஏற்பாடு செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும் குறித்த இருவரும் வெகு நாட்களாகியும் வீடு திரும்பவில்லையென கூறி பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பில் விசாரணையினை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.