கடத்தல்காரர்கள், ரவுடிகள், திருடர்களுடன் தொடர்பு..! 123 தமிழ் பொலிஸாருக்கு அதிரடியாக பறந்த இடமாற்றம்..!

ஆசிரியர் - Editor I
கடத்தல்காரர்கள், ரவுடிகள், திருடர்களுடன் தொடர்பு..! 123 தமிழ் பொலிஸாருக்கு அதிரடியாக பறந்த இடமாற்றம்..!

வடக்கு மாகாணத்தில் கடமையாற்றும் 120 தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்த்தர்களுக்கு அதிரடியாக இடமாற்றம் வழங்கப்பட்டிருக்கின்றது. கடத்தல்காரர்கள், ரவுடிகள், திருடர்களுடன் பொலிஸாருக்கு நெருங்கிய தொடர்பு உள்ளதாக,

பகிரங்க குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையிலேயே இந்த இடமாற்றம் வழங்கப்பட்டிருப்ப தாக அறியக்கூடியதாக உள்ளது. இதேவேளை மேற்படி 120 பொலிஸாருக்கான இடமாற்றம் வழங்கப்பட்டதாக வடமாகா பிரதி பொலிஸ்மா அதிபர் அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் மணல் கொள்ளை, போதைப்பொருள் கடத்தல்,  வாள்வெட்டு வன்முறை உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோருடன் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தொடர்பு உண்டு என மூத்த சட்டத்தரணி 

மு.றெமிடியஸ் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.கடந்த வாரம் யாழ்ப்பாணம் செயலகத்தில்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் கூட்டப்பட்ட கூட்டத்திலேயே பொலிஸ் அதிகாரிகள் முன்னிலையில் அமைச்சரின் கட்சியைச் சேர்ந்த மூத்த சட்டத்தரணி 

இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.இந்த நிலையிலேயே தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு  இடமாற்றம் வழங்கப்படுவதாக நம்பப்படுகிறது.வட மாகாணத்தில் ஒரே மாவட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி 

இந்த ஆண்டு இடமாற்றம் பெற்று வந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் இந்த இடமாற்றத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உரிய தரப்புகளிடம் மேன்முறையீடு செய்துள்ளனர்.

மேலும் மூத்த பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களின் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு