யாழ்.மாநகரசபை அமர்வில் களேபரம்..! ஈ.பி.டி.பி ஆதரவாலேயே மாநகர முதல்வரானாராம்..

ஆசிரியர் - Editor
யாழ்.மாநகரசபை அமர்வில் களேபரம்..! ஈ.பி.டி.பி ஆதரவாலேயே மாநகர முதல்வரானாராம்..

ஈ.பி.டி.பியின் ஒத்துழைப்பு இல்லாமல் உங்களால் முதல்வராகியிருக்க முடியுமா? என மு ன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா எழுப்பிய கேள்வியால் யாழ்.மாநகரசபையி ன் சிற்பு அமர்வு களேபரமாகியது. 

இதனைத் தொடர்ந்து மாநகர சபை மேயர் ஆர்னோல்ட் ஆதரவு கட்சியினருக்கும், ஈபிடிபி உறுப்பினர்களுக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

அத்துடன் முன்னாள் முதல்வரால் கொள்வனவுசெய்யப்பட்ட லப்டொப் எங்கே என்றும் ஈ.பி.டி.பியினர் வினா எழுப்பியுள்ளனர்.அத்தோடு அலுவலகத்திற்கு கொள்ளவு செய்யப்பட்ட ஏ.சி இயந்திரம் எங்கே, 

சபைக்கு செலுத்த வேண்டிய 6 இலட்சம் ரூபா செலுத்தாமல் இருப்பதற்கான காரணம் என்ன போன்ற கேள்விகள் எழுப்பட்டபோது, இரு தரப்பும் வார்த்தை மோதலில் ஈடுபட்டன.

Radio