மதுபோதையில் வாகனம் ஓட்டி 17 வயது மாணவியை கொலை செய்த சாரதி கைது..!

ஆசிரியர் - Editor
மதுபோதையில் வாகனம் ஓட்டி 17 வயது மாணவியை கொலை செய்த சாரதி கைது..!

மதுபோதையில் வாகனத்தை செலுத்தி வீதியால் நடந்து சென்ற 17 வயது மாணவியை கொன்ற வாகன சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெல்கொட பகுதியில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

குறித்த பாடசாலை மாணவி வீதியோரத்தில் நடந்து சென்றுக்கொண்டிருக்கையில் பின்னால் வந்த சிற்றூர்ந்து ஒன்று மோதிசென்றமையினால் இந்த விபத்து நேர்ந்துள்ளது.காயமடைந்த 17 வயதுடைய பாடசாலை மாணவி வைத்தியசாலையில் 

அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி மதுபோதையில் வாகனம் செலுத்தியுள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரை மஹர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Radio