துப்பாக்கியை காட்டி மாணவர்களை அச்சுறுத்தியது பொலிஸ்..! மாணவர் ஒன்றியம் கண்டனம்..

ஆசிரியர் - Editor I
துப்பாக்கியை காட்டி மாணவர்களை அச்சுறுத்தியது பொலிஸ்..! மாணவர் ஒன்றியம் கண்டனம்..

துப்பாக்கியை காண்பித்து மாணவர்களை அச்சு றுத்திய பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் மாணவர்கள் மதுபோதையில் இருந்ததாக பொ ய் குற்றச்சாட்டை சுமத்துகிறது.

மேற்கண்டவாறு யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம் குற்றஞ்சாட்டியுள்ளதுடன், பொலிஸா ர் மற்றும் அதிரடிப்படையினரின் இத்துமீறலைக் கண்டிப்பதாகவும் கூறியள்ளது.

இந்த விடயம் தொடர்பாக மாணவர் ஒன்றியம் மேலும் கூறுகையில், இன்று மாலை 6 மணியள வில் உந்துருளியில் வந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரை 

பொலீஸ் விசேட அதிரடிப்படையினரும், போக் குவரத்துப் பொலீசாரும் கலைத்துக் கொண்டு வந்து, யாழ். பல்கலைக்கழகத்தினுள் அனுமதி பெறாமல் – அத்துமீறி  உள்நுழைந்து 

மாணவர்களை அச்சுறுத்தியமை தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் ஊடகங்களிடம் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில், பல்கலைக்கழக வளா கத்தினுள் ஆயுதம் தாங்கிய படையினர் எக் காரணம் கொண்டும், 

அனுமதி பெறாமல் உள்ளே வருவதில்லை. இன்றைய தினம் மாணவர்கள் இருவரை வீதியிலிருந்து கலைத்துக் கொண்டு வந்து வளாகத்தினுள் வந்தது மட்டுமல்லாமல், 

துப்பாக்கியைக் காட்டி மாணவர்களை அச்சுறுத்தியுமுள்ளனர். அத்துமீறி உள் நுழைந்ததைத் திசை திருப்பும் வகையிலேயே மாணவர்கள் மது போதையில் 

இருந்ததாகப் பொலீசார் கூறுகின்றனர். இதில் உண்மையில்லை என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.    

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு