வெஸ்மினிஸ்டர் தீர்ப்பு இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக வழங்கப்படவில்லையாம்..!
இலங்கை இராணுவ பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிராக பிரிட்டன் வெஸ்மி ன்ஸ்டர் நீதிமன்றம் வழங்கிய தீர்வு தொடர்பாக இலங்கைக்கு எந்தவொரு அறிவித்தலும் விடைக்கவில்லை என இராணுவ தளபதி சவேந்திர சில்வா கூறியுள்ளார்.
அநுராதபுரத்தில் வைத்து நேற்றைய தினம் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.இலங்கை இராணுவம் மற்றும் வெளிவிவகார அமைச்சு இணைந்து இந்த விடயம் தொடர்பான தீர்மானங்கள் குறித்து ஆராய்ந்து வருகிறது.
அதற்கான நிதி சேகரிப்பதற்கு எந்த வித தேவைப்பாடுகளும் இல்லை. ஏனெனில் இதனை வெளிவிவகார அமைச்சு முன்னின்று செயற்படுத்தி வருகின்றது.அதேநேரம் தேசிய பாதுகாப்பு தொடர்பிலும் தாம் அதிக கவனம் செலுத்தி வருகின்றோம்.
அதற்கு முப்படைகளினதும், காவற்துறையினரின் ஒத்துழைப்பையும் பெற்று நடைமுறைப்படுத்துவோம் என இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா குறிப்பிட்டார். லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்தின் முன்னால்
மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது, புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ப்ரிகேடியர் ப்ரியங்க பெர்ணான்டோ, அந்தக் குற்றச்சாட்டுக்களில் குற்றவாளியாவார் என வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது.
கடந்த 2018ஆம் ஆண்டு இலங்கையின் சுதந்திர தினத்தன்று லண்டனில் உள்ள உயர்ஸ்தானிகரத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்திய புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் அவர் சைகை புரிந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.