SuperTopAds

வடக்கு கிழக்க மாகாணங்களில் 1 லட்சத்த 43 அயிரம் பேர் பாதிப்ப..! 73 நலன்புாி நிலையங்களில் மக்கள்..

ஆசிரியர் - Editor I
வடக்கு கிழக்க மாகாணங்களில் 1 லட்சத்த 43 அயிரம் பேர் பாதிப்ப..! 73 நலன்புாி நிலையங்களில் மக்கள்..

கனமழை மற்றும் வெள்ள பெருக்கினால் வடகிழக்கு மாகாணங்களில் சுமார் 1 லட்சத்து 43 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வடக்கிழக்கு மாகாணங்களில் 73 நலன்புரி மு காம்களில் சுமார் 10985 குடும்பங்கள் தங்கியிருக்கின்றனர். 

இந்நிலையில் 523 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் இதில் 9 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அதாவது கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவப்பெயர்ச்சியின் தாக்கம் காரணமாக பெய்து வரும் தொடர் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தால் வடக்கில் 1983 குடும்பங்களை சேர்ந்த 64448 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம்

யாழ்.மாவட்டத்தில் வேலணை, ஊர்காவற்றுறை, காரைநகர், யாழ்ப்பாணம், நல்லூர், கோப்பாய், சங்கானை, சண்டிலிப்பாய், உடுவில், தெல்லிப்பழை, சாவகச்சேரி, கரவெட்டி, பருத்திதுறை மற்றும் மருதங்கேணி பிரதேச செயலகங்களில் உள்ள 1858 குடும்பங்களை சேர்ந்த 6278 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உடுவில் 

பிரதேச செயலகப்பிரிவில் 43 குடும்பங்களை சேர்ந்த 158 பேர் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர். அதுபோல் மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் 75 குடும்பங்களை சேர்ந்த 242 பேர் 5 நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை உடுவில் மற்றும் கரவெட்டி பிரதேசசெயலகங்களை தவிர்ந்த ஏனைய பிரதேச செயலகப்பிரிவில் 177 வீடுகள் சேதமடைந்துள்ளன.

வவுனியாவில்
வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு, வவுனியா தெற்கு,வெங்கல செட்டிக்குளம் பிரதேசங்களைச் சேர்ந்த 1308 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் மூன்று செயலகப்பிரிவுகளிலும் 105 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

வவுனியா வடக்கில் 55 குடும்பங்களை சேர்ந்த 149 பேர் முன்று நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வெங்கலசெட்டிகுளத்தில் 86 குடும்பங்களை சேர்ந்த 293 பேர் முகாமொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியில்
கண்டாவளை, கரைச்சி, பச்சிலைப்பள்ளி மற்றும் பூநகரி பிரதேச செயலகங்களில் 7225 குடும்பங்களைச் சேர்ந்த 23344 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவில் 10 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதில் 2 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. பூநகரியில் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

இதேவேளை கிளிநொச்சியிலுள்ள நான்கு பிரதேச செயலகப் பிரிவிலும் 1877 குடும்பங்களைச் சேர்ந்த 6090 பேர் 25 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவில்
முல்லை மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு , மாந்தை கிழக்கு , கரைதுறைப்பற்று, வெலிஓயா மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப்பிரிவுகளில் 9297 குடும்பங்களைச் சேர்ந்த 30020 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் 323 குடும்பங்களைச் சேர்ந்த 1060 பேர் 15 நலம்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மன்னாரில்
மன்னார் மாவட்டத்தில் முசலி, மன்னார் நகர் மடு, மாந்தை மேற்கு மற்றும் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் 1051 குடும்பங்களைச் சேர்ந்த 3478 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், 195 குடும்பங்களைச் சேர்ந்த 644 பேர் 7 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு_மாகாணத்தில்
கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருமலை மாவட்டங்களில் 22992 குடும்பங்களைச் சேர்ந்த 79 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் 198 வீடுகள் சேதமடைந்துள்ளன.
இதேவேளை வெள்ளம் காரணமாக சம்மாந்துறையில் ஒருவர் பலியான அதேநேரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.