வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி உதவிகளுக்கு 35 மில்லியன் ஒதுக்கீடு..!

இலங்கையில் தொடரும் கனமழையினால் பல ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிரு க்கும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்காக 35 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேற்கண்டவாறு இடர் நிவாரண சேவை மத்திய நிலையத்தின் பணிப்பாளர் சமிந்த பத்திராய தெரிவித்துள்ளார்.சீரற்ற காலநிலையின் காரணமாக நேற்று மாலை வரையில்
நாடு முழுவதும் பல்லாயிர கணக்கான மக்கள் பாதிக்கட்பட்டுள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கான நிவாரணப் பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.