வடக்கு மாகாணத்தில் 17062 குடும்பங்களை சேர்ந்த 55453 பேர் பாதிப்பு..! பாதிப்பு மேலும் வலுக்கும் என அச்சம்..

ஆசிரியர் - Editor I
வடக்கு மாகாணத்தில் 17062 குடும்பங்களை சேர்ந்த 55453 பேர் பாதிப்பு..! பாதிப்பு மேலும் வலுக்கும் என அச்சம்..

வடமாகாணத்தில் தொடரும் கனமழையினால் சுமார் 17062 குடும்பங்களை சேர்ந்த 55453 பேர் பாதிக்கப்பட்டு 48 இடைத்தங்கல் முகாம்களிலும், உறவினர், நண்பர்கள் வீடுகளில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர். 

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி மாவட்டங்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்சியாக கனமழை பெய்துவரும் நிலையில் குளங்களின் நீர்மட்ட ம் அதிகரிப்பதுடன், குடிமனைகளுக்குள்தொடர்ச்சியாக வெள்ளநீர் புகுந்து வருகின்றது. 

இந்நிலையில் இன்று நண்பகல் 12 மணிவ ரையான தகவலின்படி 17062 குடும்பங்களை சேர்ந்த 55453 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதன்படி யாழ்.மாவட்டத்தில்1215 குடும்பங்களை சேர்ந்த 4234 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 

இதேபோல் வவுனியா மாவட்ட த்தில் 330 குடும்பங்களை சேர்ந்த 1017 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், மன்னார் மாவட்டத்தில் 594 குடும்பங்களை சேர்ந்த 2154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், கிளிநொச்சி மாவட்டத்தில் 6841 குடும்பங்களை சேர்ந்த 22262 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 

முல்லைத்தீவு மாவட்டத்தில் 9297 குடும்பங்களை சேர்ந்த 30020 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை மழையின் பாதிப்புமேலும் அதிகரிக்கும் என எச்சரிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு