6841 குடும்பங்களை சேர்ந்த 22262 பேர் பாதிப்பு..! வெள்ளகாடாக மாறியது கிளிநொச்சி. அனர்த்தத்தை எதிர்கொள்ள கலந்துரையாடல்..
கிளிநொச்சி மாவட்டத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தினால் சுமார் 6841 குடும்பங்களை சேர்ந்த 22262 குடும்பங்களை சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறியிருக்கும் மாவ ட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம்,
மாவட்டத்தில் இதுவரை 21 நலன்புரி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப் பட்டிருக்கும் மக்களுக்கு தேவையான உடனடி உதவிகளை வழங்க நடவடிக்கைகள் எடுக் கப்பட்டிருப்பதாகவும் கூறியிருக்கின்றார்.
இது குறித்து ஆராய்வதற்காக இன்று காலை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அரசா ங்க அதிபர் தலமையில் காலை 10 மணிக்கு நடைபெற்ற கலந்துரையாடலில் மாவட்டத்தின் வெள்ள நிலைமைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.
இதன்போது வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் 21 பேர் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு இருப்பதாகவும் இந்த மக்களுக்கான உடனடித் தேவைகளை வழங்குவதற்கு சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும்,
மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் தெரிவித்துள்ளார். இக் கலந்துரையாடலில் குளங்களின் நீர் மட்டம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது குறிப்பாக இரணைமடுகுளம் கல்மடுகுளம் ஆகிய குளங்களின் உடைய நிலைமைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
இக்கலந்துரையாடலில் பாதுகாப்பு படைகளின் பாதுகாப்பு படையினர் பொலீஸார் நீர்ப்பாசனத் திணைக்கள பொறியியலாளர்கள் அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் திணைக்களத் தலைவர்கள் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.