19 மாவட்டங்கள் வெள்ளகாடாக மாறியது..! 9175 குடும்பங்கள் பாதிப்பு, 3 பேர் பலி, 4 பேர் காயம், ஒருவரை காணவில்லை..

ஆசிரியர் - Editor I
19 மாவட்டங்கள் வெள்ளகாடாக மாறியது..! 9175 குடும்பங்கள் பாதிப்பு, 3 பேர் பலி, 4 பேர் காயம், ஒருவரை காணவில்லை..

இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலையினால் கடந்த 2ம் திகதி தொடக்கம் இன்று நண்பகல் வரை சுமார் 19 மாவட்டங்கள் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 9175 குடும்பங்களை சேர்ந்த 30838 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் காயமடைந்தும், ஒருவர் காணாமல்போயும் உள்ளனர். அத்துடன் இந்த அனர்த்தங்களில் சிக்குண்டு 11 வீடுகள் முழுமையளவிலும், 358 வீடுகள் காணாமல் போயும் உள்ளனர்.

இதேவேளை 663 குடும்பங்களைச் சேர்ந்த 2,081 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டும் உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பதுளை, மொனராகலை, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, கேகாலை, இரத்தினபுரி, கண்டி, நுவரெலியா, மாத்தளை, அனுராதபுரதம், பொலன்னறுவை, புத்தளம், 

குருணாகல் மற்றும் அம்பாந்தோட்டை உள்ளிட்ட மாவட்டங்களே இவ்வாறு சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு