சிவில் நடவடிக்கையில் இராணுவம்..! பகிரங்கமாக ஒப்புக்கொண்ட ஜே.வி.பி.. தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் என கூச்சல்..

ஆசிரியர் - Editor I
சிவில் நடவடிக்கையில் இராணுவம்..! பகிரங்கமாக ஒப்புக்கொண்ட ஜே.வி.பி.. தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் என கூச்சல்..

இலங்கை இராணுவத்தை சிவில் நடவடிக்கையில் இணைத்துக் கொண்டுள்ளமை தேசிய பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும். என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செய லாளர் ரில்வின் சில்வா குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார். 

குற்றஞ்செய்தவர்கள் அதிகாரிகளாகவும் அந்த குற்றங்களை விசாரித்தவர்கள் குற்றவாளிக ளாகவும் ஆக்கப்பட்டுள்ளனர் என்று விசனம் வெளியிட்டார்.தேசிய மக்கள் சக்தி காரியாலயா த்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் 

சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, ஜனாதிபதி பதவியேற்றவுடனேயே இராணுவத்தினரை சிவில் சேவைகளுள் இணைத்து நாட்டில் அமைதியை நிலைநாட்டும் பணிகளில் ஈடுபடுத்துவதாக வர்த்தமானி வெளியிட்டிருக்கிறார். 

இந்த செயற்பாடு தற்போது நாட்டுக்கு தேவையா என்பதே எமது கேள்வியாகும். இந்நிலையில் ஊடகவியலாளர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளமை, சில ஊடக அலுவலகங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளமை, 

சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தல் போன்ற சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. விஷேட விசாரணை பிரிவின் உயர் அதிகாரிகள் பதவி மாற்றப்பட்டுள்ளனர். இராணுவ ஆட்சிக்கு வித்திடும் இது போன்ற ஜனநாயக விரோத செயல்கள் ஆரம்பத்திலிலேயே தடுக்கப்பட வேண்டும். 

நாட்டில் சாதாரண சூழல் நிலவுகின்ற இவ்வேளையில் பொலிஸாரின் சேவைகளுக்கு இராணுவத்தினர் உள்வாங்கப்பட்டுள்ளார்கள். அவ்வாறெனில் நாட்டில் தற்போதுள்ள நிலைமையை கட்டுப்படுத்துவதற்கான பொலிஸாருக்கு இல்லையா? 

இவ்வாறு மக்களை இராணுவ செயற்பாடுகளுக்கு பழக்கப்படுத்தி முழுமையாக இராணுவ ஆட்சியை ஏற்படுத்த முயற்சிப்பது தேசிய பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும். காரணம் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருந்தால் இராணுவ ஆட்சி

 அத்தியாவசியமற்றது எனத் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு