கோட்டபாய ராஜபக்ச பதவியேற்றதன் பின்னர் துரிதகதியில் தையிட்டி விகாரை அமைப்பு பணிகள்..!

ஆசிரியர் - Editor
கோட்டபாய ராஜபக்ச பதவியேற்றதன் பின்னர் துரிதகதியில் தையிட்டி விகாரை அமைப்பு பணிகள்..!

யாழ்.வலிகாமம் வடக்கு தையிட்டி பகுதியில் தனியார் காணியில் அடாத்தாக அமைக்கப் பட்ட விகாரை கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் துரிதகதியி ல் இடம்பெற்றுவருவதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சமூக அக்கறை கொண்ட சட்டத்தரணிகளும், அரசியல் வாதிகளும் குறித்த விகாரை கட்டுவதற்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்றும் வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர் எஸ்.சஜீவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வலி.வடக்கு தையிட்டிப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான சுமார் இரண்டு ஏக்கரை ஆக்கிரமித்து புதிய புத்த விகாரை ஒன்றினை அமைக்கம் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த விடயம் தொடர்பில் வலி.வடக்கு பிரதேச சபைக்கு எழுத்து மூலமான முறைப்பாடுகள் கொடுக்கப்பட்டும் இதுவரையில் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் குறித்த 

விகாரையினை அமைக்கும் நடவடிக்கையில் இராணுவம் மிக மும்முரமாக செயற்பட்டு வருகின்றது. இதனை சட்ட ரீதியில் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இவ்வாறான நடவடிக்கை எடுக்க அரசயில் வாதிகளும், 

சமூக அக்கறை கொண்ட சட்டத்தரணிகளும் முன்வர வேண்டும் என்றும் அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Radio