வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்..! கட்டைக்காடு பகுதியிலிருந்து இரு குடும்பங்கள் வெளியேற்றம்..

ஆசிரியர் - Editor I
வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்..! கட்டைக்காடு பகுதியிலிருந்து இரு குடும்பங்கள் வெளியேற்றம்..

கிளிநொச்சி கட்டைக்காடு- பெரியகுளத்தில் நீர்மட்டம் உயர்ந்தமையினால் குடியிருப்புக்கு கள் வெள்ளம் புகுந்த நிலையில் இரு குடும்பங்களை கண்டாவளை பிரதேச செயலக ஊ ழியர்கள் அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.

தொடர் மழை காரணமாக கிளிநொச்சி கட்டைக்காடு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரியகுளம் நிறைவு மட்டத்தை அடைந்துள்ளமையால் அதிலிருந்து வெளியேறும் வெள்ள நீர் வீடுகளிற்குள் சென்றுள்ளது. 

அதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன் வெள்ள நீர் வீடுகளிற்குள் உட்புகுந்த நிலையில் வாழும் குடும்பங்களை சந்தித்தார். 

அங்கு காணப்படும் வெள்ள நீர் வெளியேறும் வரை அவர்களை கட்டைக்காடு அ.த.க. பாடசாலையில் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்ததார். அதேவேளை, பாதிக்கப்பட்ட குறித்த இரு குடும்பங்களிற்குமான உணவு, 

சுகாதாரம் உள்ளிட்ட வசதிகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளையும் கண்டாவளை பிரதேச செயலாளர் மேற்கொண்டுள்ளார். அதேவேளை குறித்த பகுதியில் வட்டக்கச்சி செல்லம் பிரதான வீதி ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

வீதியை குறுக்கெடுத்து வெள்ள நீர் பாய்வதனால் மக்கள் போக்குவரத்து செய்வதில் பாதிப்புக்களை எதிர்கொள்கின்றனர்.பிரமந்தனாறு குளம் அடைவு மட்ட்த்தை அடைந்து மேலதிக நீர் வெளியேறி வருகின்றது. 

இதன் காரணமாக அப்பகுதயில் உள்ள மக்கள் பயன்பாட்டு வீதி ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுளு்ளது. அப்பகுதியல் வாழும் 15 குடும்பங்கள் குறித்த பாதிப்பினை எதிர்கொண்டுள்ளனர். 

அப்பகுதியில் காணப்படும் நிலை தொடர்பில் கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன் நேரடியாக சென்று பார்வையிட்டார். இன்று காலை முதல் ஓரளவான மழையற்ற காலநிலை தொடர்கின்றது. 

தொடர்ந்தும் மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வார்கள்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு