புகழ்பெற்ற கோண்டாவில் ஆசிமடம் கனமழையினால் இடிந்து விழுந்தது..!
யாழ்.குடாநாட்டில் பெயர் பெற்ற கோண்டாவில்- ஆசிமடம் கனமழையினால் நேற்றய தினம் இடிந்து விழுந்திருக்கின்றது.
குறித்த மடமானது பல வருடங்களுக்கு முன்னர் ஆலயத்திற்கு வருபவர்கள், அப்பகுதியில் உள்ளவர்கள் மற்றும் வீதியால் சென்று வருபவர்கள் இளைப்பாறுவதற்கான அமைக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு அமைக்கப்பட்ட குறித்த மடத்தினை ஆலய நிர்வாகம் தொடர்ந்து உரிய முறையில் பராமரித்து வந்திருந்த போதும், கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர்ச்சியான மழையால் அம்மடம் இடிந்து வீழ்ந்துள்ளது.
பழமைவாய்நத குறித்த மடத்தினை மீண்டும் அதே இடத்தில் அமைக்க போவதாக அரசடி விநாயகர் ஆலய நிர்வாகத்தில் பொது மக்களிடம் தெரிவித்துள்ளனர்.