மிதமிஞ்சிய வேகம்..! கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதிய ஹயஸ். 9 பேர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
மிதமிஞ்சிய வேகம்..! கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதிய ஹயஸ். 9 பேர் படுகாயம்..

எல்ல வெல்லவாய பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த ஹயஸ் வாகனம் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 9 பேர் காயமடைந்துள்ளனர். 

பண்டாரவளையிலிருந்து கல்முனை நோக்கி சென்று கொண்டிருந்த வேன் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வாகன சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு