அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு உடனடி உதவிகளை வழங்குங்கள்..! பிரதமர் அதிரடி உத்தரவு..

ஆசிரியர் - Editor
அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு உடனடி உதவிகளை வழங்குங்கள்..! பிரதமர் அதிரடி உத்தரவு..

நாட்டில் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு பாதுகாப்பு மற்றும் உதவி களை வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச உத்தரவு வழங்கியுள்ளார்.

இன்று திங்கட்கிழமை பிரதமர் தலைமையில் , அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன், இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க 

மற்றும் பாதுகாப்பு சபை பிரதானிகள் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலின் போதே இவ்வாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. 

இக்கலந்துரையாடல் தொடர்பில் பிரதமர் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சீரற்ற காலநிலையால் இது வரையில் 9 மாகாணங்கள் கூடுதலாக அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்துள்ளன. 

இவற்றில் மட்டக்களப்பு, நுவரெலியா, அம்பாறை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களே அதிகளவு பாதிப்புக்களுக்கு முகங்கொடுத்துள்ளன. 

இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களை குறித்த பிரதேசங்களிலிருந்து மீட்பதற்காகவும் , அவர்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குவதற்காகவும் விஷேட வேலைத்திட்டத்தினை 

முன்னெடுக்குமாறும் உரிய அதிகாரிகளுக்கு பிரதமரால் பணிப்புரை விடுக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட மக்களின் உடல் நலம் பற்றி கவனத்தில் கொள்ளுமாறும், 

அவர்களுக்கு உலர் உணவுகளை வழங்குமாறும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

Ads
Radio
×