தொடரும் கனமழை..! 53 குடும்பங்கள் பாதிப்பு, மீட்பு குழு தயார் நிலையில்..

ஆசிரியர் - Editor
தொடரும் கனமழை..! 53 குடும்பங்கள் பாதிப்பு, மீட்பு குழு தயார் நிலையில்..

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடரும் கனமழையினால் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் மட்டும் 53 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக இடர்முகாமைத்துவ நிலையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இன்று பகல் கிடைக்கப்பெற்ற புள்ளி விபரங்களின் அடிப்படையில் கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பரந்தன் கிராம சேவையாளர் பிரிவில் 47 குடும்பங்களை சேர்ந் 121 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 

பிரமந்தனாறு கிராம சேவகர் பிரிவில் 6 குடும்பங்களை சேர்ந்த 17 புர் பாதிக்க்பபட்டள்ளதாக குறித்த புள்ளி விபரம் தெரிவிக்கின்றது. இதுவரை பாரிய அளவிலான பாதிப்புக்கள் ஏற்படவில்லை எனவும்,

இடை தங்கல் முகாம்கள் அமைக்கப்படவில்லை எனவும் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. பாதிப்புக்கள் தொடர்பான விபரங்கள் தொடர்ந்தும் திரட்டப்பட்டு வருவதாகவும்,

24 மணிநேர கண்காணிப்பு மற்றும் அவதானிப்புக்களில் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் ஈடுபட்டுள்ளதாகவும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவிக்கின்றார். 

பாதிப்பிற்குள்ளான குடம்பங்கள் தொடர்பான விபரங்கள் தொடர்ந்தும் திரட்டப்பட்டு வரும் நிலையில், அனர்த்தம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் விரைந்து மக்களிற்கான தேவைகள் மற்றம் பாதுகாப்புக்களை மேற்கொள்வதற்கு 

கிளிநாச்சி மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட இடர் முகாமைத்தவ நிலையம் தயாராக உள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவிக்கின்றார்.

Ads
Radio
×