வீதி ஒழுங்கை மீறிய ஜனாதிபதியின் பாாியாருக்கு தண்டம் விதித்த பொலிஸாா்..! தண்டம் செலுத்தி சாரதி அனுமதி பத்திரத்தை பெற சொன்னாரம் ஜனாதிபதி..

ஆசிரியர் - Editor
வீதி ஒழுங்கை மீறிய ஜனாதிபதியின் பாாியாருக்கு தண்டம் விதித்த பொலிஸாா்..! தண்டம் செலுத்தி சாரதி அனுமதி பத்திரத்தை பெற சொன்னாரம் ஜனாதிபதி..

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் பாாியாா் அயோமா ராஜபக்ச வீதி ஒழுங்கை மீறி பயணி த்தமைக்காக பொலிஸாா் அபராதம் விதித்துள்ளனா். 

சிங்கள ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அனுராதபுரத்தில் மத வழிப்பாடுகள் மேற்கொள்ள சென்ற சந்தர்ப்பத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீதியின் சட்டத்தை மீறியமையினால் அவர் பயணித்த வாகனத்தை பொலிஸார் நிறுத்தியுள்ளனர். ஜனாதிபதியின் மனைவி என்றதும் பொலிஸார் 

குழப்பம் அடைந்துள்ளனர்.எனினும் எந்த பிரச்சினையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். தான் வாகனத்திற்குள் இருப்பதனை கூறாமல் தவறை ஏற்றுக் கொண்டு, 

அபராத பத்திரத்தை தருமாறு அயோமா ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.மத வழிப்பாடு நிறைவடைந்து வீட்டிற்கு சென்ற அயோமா, 

சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார். இதன்போது அபாரத பணத்தை செலுத்தி 

சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி தெரிவித்ததாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

Ads
Radio
×