தந்தை, தாய், மகள் சடலமாக மீட்பு..! காணாமல்போன மகனை தேடி தொடரும் தேடுதல்.. தொடா்ந்து போராடும் இராணுவம்..

ஆசிரியர் - Editor
தந்தை, தாய், மகள் சடலமாக மீட்பு..! காணாமல்போன மகனை தேடி தொடரும் தேடுதல்.. தொடா்ந்து போராடும் இராணுவம்..

நுவரெலியா மாவட்டம் வலப்பனை பகுதியில் மண்சாிவில் சிக்கி காணாமல்போன இளைஞனை தேடும் பணிகள் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. 

வீட்டின் மீது மண் சாிந்து விழுந்ததில் 17 வயதான இளைஞன் காணாமல்போயுள்ளான். குறித்த இ ளைஞனை மீட்கும் பணிகள் சீரற்ற காலநிலையால் தாமதமானது. 

எனினும் இன்று காலை சீரான காலநிலை நிலவுவதால் வலப்பனை காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினரும் இணைந்து மேற்படி தேடுதல் பணியை 

ஆரம்பித்துள்ளதாக வலப்பனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.நேற்று பிற்பகல் பெய்த கடும் மழையுடன் மண்மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக 

இந்த பணிகள் நிறுத்தப்பட்டிருந்தது.நேற்று முன்தினம் இரவு வலப்பனை - மலபத்தாவ பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 

அந்த வீட்டிலிருந்த தந்தை, தாய், மற்றும் மகள் ஆகியோர் காணாமல் போயிருந்தனர். இந்த நிலையில் நேற்றைய தினம் தேடும் பணிகள் இடம்பெற்றதுடன் 

குறித்த மூன்று பேரும் சடலமாக மீட்கப்பட்டனர்.

Radio
×