இலங்கை நாடாளுமன்ற தோ்தல் ஏப்ரல் 25ல்..! மஹிந்த தேசப்பிாிய அதிரடி கருத்து..

ஆசிரியர் - Editor
இலங்கை நாடாளுமன்ற தோ்தல் ஏப்ரல் 25ல்..! மஹிந்த தேசப்பிாிய அதிரடி கருத்து..

நாடாளுமன்றத்தை 2020 மாா்ச் மாதம் முதல் கிழமை கலைத்தால் ஏப்ரல் மாதம் 25ம் திகதி பொது தோ்தலை நடாத்தலாம். என தோ்தல் ஆணைக்குழுவின் தலைவா் மஹிந்த தேசப்பிாிய ஊடகங்க ளுக்கு கருத்து தொிவித்திருக்கின்றாா். 

இது தொடா்பில் மேலும் அவா் கூறுகையில், அரசியல் யாப்புக்கு அமைய நாடாளுமன்றத்தை எதிர்வரும் மார்ச் முதல் வாரத்தில் கலைக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளை வெளிநாட்டில் இருக்கும் 

இலங்கையர்களுக்கு தேர்தல்களில் வாக்களிக்க தபால் மூல வாக்களிப்பு சந்தர்ப்பத்தை வழங்கவும் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியுள்ளார்.அதேபோன்று தனது இராஜினாமா தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை 

என்பதையும் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் இந்த நேர்காணலில் குறிப்பிட்டார்.

Radio
×