இந்தியாவுடன் மிக நோ்மையாகவும், வெளிப்படையாகவும் செயற்படுவேன்..! இந்தியாவுக்கே முதலிடம்..

ஆசிரியர் - Editor I
இந்தியாவுடன் மிக நோ்மையாகவும், வெளிப்படையாகவும் செயற்படுவேன்..! இந்தியாவுக்கே முதலிடம்..

இந்தியாவுடன் மிக நோ்மையாகவும், வெளிப்படையாகவும் தொடா்புகளை பேணவுள்ளதாக கூறி யிருக்கும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச, இந்தியாவுக்கு சகல சந்தா்ப்பங்களிலும் முதலிடம் கொடுக்கப்படும். எனவும் கூறியிருக்கின்றாா். 

இந்திய பயணத்தின்போது ஹிந்து பத்திாிகைக்கு வழங்கிய நோ்காணலிலேயே ஜனாதிபதி கோ ட்டபாய ராஜபக்ச மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில்,  சீன முதலீடுகளில் மாற்றம் ஏற்பட வேண்டுமாயின் 

இந்தியா உள்ளிட்ட பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுனள் இலங்கையில் அதிகளவிலான முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான உறவுகள் இந்தி யாவிற்கு சந்தேகத்தை ஏற்படுத்துகின்ற போதிலும் 

சகல சந்தர்ப்பங்களில் இந்தியாவிற்கு முன்னுரிமை வழங்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.1987 ஆம் ஆண்டு 13வது அரசியலமைப்பு சீர்த்திருத்தமானது பெரும் பலான சிங்கள மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கு 

எதிராக கொண்டு வரப்பட்ட சீர்த்திருத்தமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன் பல சரத்துக்கள் பகுதியளவில் தற்போது அமுலாவதாக அவர் தெரிவித்துள்ளார்.வடக்கு - கிழக்கு பகுதிகளில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு 

சிங்கள மக்கள் மத்தியில் இருந்து எதிர்ப்புக்கள் வெளியாவதில்லை.எனினும் காவற்துறை அதிகாரம் போன்ற சில விடயங்களை நடைமுறைப்படுத்த முடியாது.அதற்கான மாற்று தீர்வுகள் தொடர்பில் கலந்துரையாட முடியும் என ஜனாதிபதி 

கோட்டாபய ராஜபக்ஷ ஹிந்து நாளிதழுக்கு தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு