SuperTopAds

சிறுமியை கடத்தி பாலியல் சித்திரவதை புாிந்த நபா்கள், கோண்டாவில் கொலையுடன் சம்மந்தப்பட்டவா்களா..? விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி..

ஆசிரியர் - Editor I
சிறுமியை கடத்தி பாலியல் சித்திரவதை புாிந்த நபா்கள், கோண்டாவில் கொலையுடன் சம்மந்தப்பட்டவா்களா..? விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி..

கோட்டாவில் இரும்பக உாிமையாளா் கொலையுடன் தொடா்புடைய குற்றச்சட்டில் கைது செய்ய ப்பட்ட இருவா் சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டுடன் தொடா்புடையவா் கள் என சந்தேகிக்கப்படும் நிலையில், 

குறித்த நபா்களின் குருதி மாதிாிகளை பெற்று சோதிக்க யாழ்.நீதிவான் நீதிமன்றம் ஒப்புதல் வழ ங்கியிருக்கின்றது. நண்பருடன் இருந்த சிறுமியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்தி ற்குட்படுத்தி அதனை தமது தொலைபேசியில் ஒளிப்படம் எடுத்தனர்.

என்ற குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர்கள் இருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் கொலை, கொள்ளை உள்ளிட்ட மேலும் மூன்று வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் என்பதுவும் குறிப்பிடதக்கது. 

இந்நிலையில், சிறுமியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சம்பவம் கோப்பாய், இருபாலையில் கடந்த 15ஆம் திகதி இடம்பெற்றிருந்த நிலையில், வீடு திரும்பிய சிறுமி, சம்பவம் தொடர்பில் தாயாரிடம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமியும் தாயாரும் ஒரு வாரத்தின் பின்னர் கடந்த 23ஆம் திகதி கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளனர்.சந்தேகத்தின் பேரில் சிறுமியின் நண்பரை அழைத்து விசாரணை செய்த பொலிஸார், 

அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர்கள் இருவரைக் கைது செய்துள்ளனர். உரும்பிராயைச் சேர்ந்த சிவலிங்கம் விஜிதரன் அல்லது குட்டி, இருபாலையைச் சேர்ந்த சற்குணம் ஜெம்சன் ஆகிய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் கடந்த 25ஆம் திகதி முற்படுத்தப்பட்டனர். சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் பி அறிக்கை தாக்கல் செய்திருந்த பொலிஸார், 

சந்தேகநபர்கள் இருவரையும் அடையாள அணிவகுப்புக்கு உள்படுத்தவேண்டும் என்று விண்ணப்பம் செய்தனர்.வழக்கை விசாரித்த யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன், சந்தேகநபர்கள் இருவரையும் 

வரும் 10ஆம் திகதி அடையாள அணிவகுப்பு உள்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தி அன்றுவரை விளக்கமறியல் வைக்க உத்தரவிட்டார்.அதனையடுத்து சந்தேகநபர்கள் இருவரையும் மூன்று வெவ்வேறு வழக்குகளில் பொலிஸார் முற்படுத்தினர். 

கோண்டாவில் உப்புமடச் சந்தி இரும்பக உரிமையாளர் கொலை, கொள்ளைச் சம்பவம் மற்றும் சொத்துக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட ஏற்கனவே உள்ள வழக்குகளிலேயே சந்தேகநபர்கள் இருவரும் முற்படுத்தப்பட்டனர்.

சந்தேகநபர்களுக்கும் கொலைக்கு தொடர்பு இருபதாக சான்று ஆதாரங்கள் உள்ளனவா? என்று பொலிஸாரிடம் மன்று கேள்வி எழுப்பிய நிலையில், கொலைச் சம்பவம் இடம்பெற்ற அன்று சந்தேகநபர்கள் இருவரும் அங்கு நின்றனர் என்று பொலிஸார் மன்றுரைத்துள்ளனர். 

அத்துடன், கொலைச் சம்பவ இடத்தில் பெறப்பட்ட குருதி மாதிரிகளுடன் சந்தேநபர்களின் குருதி மாதிரிகள் ஒத்துச் செல்கின்றவா என்று விசாரணைகளை முன்னெடுக்க அவர்களது குருதி மாதிரிகளைப் பெற்றுக்கொள்ள பொலிஸார் மன்றில் விண்ணப்பம் செய்தனர்.

அதற்கு அனுமதியளித்த மேலதிக நீதிவான், கொலை வழக்கு உள்ளிட்ட 3 வழக்குகளிலும் சந்தேகநபர்கள் மூவரையும் வரும் 10ஆம் திகதிவரை விளக்கமறியில் வைக்க உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.