மருதங்குளம் அணைக்கட்டு உடையும் ஆபத்து..! இராணுவம், பொதுமக்கள் இணைந்து போராட்டம்..

ஆசிரியர் - Editor I
மருதங்குளம் அணைக்கட்டு உடையும் ஆபத்து..! இராணுவம், பொதுமக்கள் இணைந்து போராட்டம்..

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்சசியாக பெய்துவரும் கன மழைகாரணமாக, மாவட்டத்திலுள்ள குளங்கள் அனைத்தும் நீர் நிரம்பிக்காணப்படுகின்றன.

இந் நிலையில் முல்லைத்தீவு - துணுக்காய் பிரதேசசெயலகத்தில், வவுனிக்குளம் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பிரிவுக்குட்பட்ட, புத்துவெட்டுவான் மருதங்குளம் 

உடைப்பெடுக்கும் அபாயத்திலுள்ளது.குறித்த மருதங்குளமானது சுமார் 9.5அடி நீரை தேக்கிவைத்திருக்கக்கூடிய குளமாகும், அண்மைய நாட்களாக 

பெய்துவரும் கன மழை காரணமாக இக்குளத்தில் நீர் நிரம்பிக் காணப்படுவதுடன், கலுங்கி கட்டுப் பகுதியால் பாலிய அளவில் நீர்க் கசிவும் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு கலுங்கி கட்டுப் பகுதியில் ஏற்பட்டுள்ள பாரிய நீர்க்கசிவினை தடுப்பதற்கான முயற்சியில் நீர்ப்பசனத் திணைக்களத்தினர் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டபோதும் 

அந்த முயற்சி பயனளிக்கவில்லை.குறிப்பாக நீர்க்கசிவு ஏற்படும் பகுதியில் ஆறு அடியளவில் நீர்தேங்கி நிற்பதால், நீர்க்கசிவை தடுக்கும் பணி கைவிடப்பட்டுள்ளது.

எனவே குளத்தின் வால்கட்டுப் பகுதியால், சுமார் இரண்டு அடியளவில் நீரை வெட்டி வெளியேற்றுவதற்கான செயற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.

இவ்வாறு நீரை வெளியேற்றி, குளத்தில் நீரை குறைப்பதன் மூலம், நீர்க்சிவை தடுக்க முடியுமென வவுனிக்குளம் நீர்ப்பாசனத்திணைக்கள தொழில்நுட்ப உத்தியோகத்தர் தெரிவித்தார்.

அதேவேளை இவ்வாறு வெட்டியகற்றப்படும் நீரானது, பாதுகாப்பாக அக்கராயன் குளத்தினைச் சென்றடையுமெனவும், இதனால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்புக்களும் இல்லை 

என்பதுடன், தாம் இது தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அப்பகுதி பொதுக்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக 

முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார். மேலும் சம்பவ இடதில் வவுனிக்குளம் நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்கள், 

இராணுவத்தினர், பொதுமக்கள், துணுக்காய் பிரதேசசபைத் தவிசாளர், துணுக்காய் பிரதேசசபை உறுப்பினர் ச.சுயன்சன் ஆகியோர் 

இணைந்து குளத்தின் நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு