SuperTopAds

யாழ்.மல்லாகம்- கட்டுவன் இடையில் புகைரதத்தை கவிழ்க்க சதி..! தீவிர விசாரணையில் களமிறங்கியுள்ள பொலிஸாா்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மல்லாகம்- கட்டுவன் இடையில் புகைரதத்தை கவிழ்க்க சதி..! தீவிர விசாரணையில் களமிறங்கியுள்ள பொலிஸாா்..

யாழ்.மல்லாகம் பகுதியில் மக்கள் குடியிருப்புக்கள் நிறைந்த இடத்தில் புகைரதத்தை கவிழ்க்க சதி நடந்துள்ளதாக கூறியுள்ள பொலிஸாா். நாசகார வேலையில் ஈடுபட்டவா்கள் தொடா்பிலான முக்கிய தகவல்கள் சிக்கியுள்ளதாகவும் கூறியுள்ளனா். 

மல்லாகத்திற்கும் கட்டுவானுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள ரயில் பாதையில் உள்ள வளைவொன்றில் தண்டவாளத்தையும் சிலிப்பர் கட்டைகளையும் இணைத்து பொருத்தப்பட்டிருக்கும் இரும்பு கிளிப்புகளை இனம்தெரியாத நபர்கள் 

நேற்று வெள்ளிக்கிழமை அகற்றியுள்ளனர். அவர்களால் சுமார் இருபதற்கும் மேற்பட்ட சிலிப்பர் கட்டைகளின் கிளிப்புகள் அகற்றப்பட்டிருந்தன. இந்தச் சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்களை அடுத்து

 விரைந்து செயற்பட்ட பொலிஸார் அது தொடர்பில் ரயில் திணைக்களத்தினருக்கு தெரியப்படுத்தினர்.அதனை அடுத்து விரைந்து செயற்பட்ட ரயில் திணைக்கள அதிகாரிகள் , கிளிப்புகள் அகற்றப்பட்ட இடத்தில் வேறு கிளிப்புகள் பொருத்த 

நடவடிக்கை எடுத்து ரயில் பாதை சீர் செய்யப்பட்டது. அதனால் நடைபெறவிருந்த பெரும் விபத்து தடுக்கப்பட்டது.தண்டவாளத்தையும் சிலிப்பர் கட்டைகளையும் இணைத்து பொருத்தபட்டிருந்த கிளிப்புகள் அகற்றப்பட்டமையால் தொடருந்து வரும்போது 

அவ்விடத்தில் தொடருந்து தடம் புரளும் வாய்ப்புக்கள் அதிகம். அதேவேளை அப்பகுதி குடிமனைகள் அதிகமாக உள்ள பகுதியும் ஆகும். அவ்விடத்தில் தொடருந்து தடம் புரண்டு விபத்து ஏற்பட்டு இருந்தால் உயிரிழப்புக்கள் அதிகமாக ஏற்பட்டு இருக்கலாம்.

இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பில் புகையிரத திணைக்கள அதிகாரிகள் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

அதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் கல்கமுவ பகுதியில் யாழ்.தேவி தொடருந்து தடம் புரண்டது. அதனால் சுமார் இரண்டு நாள்கள் வடக்குக்கான தொடருந்து சேவைகள் தடைப்பட்டு இருந்தது. இந்நிலையிலையே யாழ்ப்பாணத்தில் 

இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.