SuperTopAds

வடக்கு மாகாணத்தில் இராணுவமுகாம்கள், இராணுவம் அகற்றப்படாது..! பாதுகாப்பு செயலா் அதிரடி..

ஆசிரியர் - Editor I
வடக்கு மாகாணத்தில் இராணுவமுகாம்கள், இராணுவம் அகற்றப்படாது..! பாதுகாப்பு செயலா் அதிரடி..

வடக்கு மாகாணத்தில் உள்ள இராணுவ முகாம்கள், மற்றும் இராணுவம் அகற்றப்படாது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளா் மேஜா் ஜெனரல் கமால் குணரத்ன கூறியுள்ளாா். 

கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு இன்று காலை விஜயம் செய்த பாதுகாப்புச் செயலாளர் அதன் பின்னர் அஸ்கிரியப்பீட பதிவாளர் மெதகம தம்மானந்த தேரர் 

மற்றும் அஸ்கிரியப்பீட மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் ஆகியோரை சந்தித்து ஆசிபெற்றுக்கொண்டார். அதன் பின்னர், 

ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், இம்முறை வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வுகளில் எந்தவொரு சட்டவிரோத சம்பவங்களும் 

பதிவாகாததினால் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறினார்.இருந்த போதிலும் எதிர்காலத்தில் இந்த செயற்பாடுகள் குறித்து விசேட 

வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.அதேபோல வடக்கிலிருந்து எந்த காரணத்திற்காகவும் 

படை முகாம்களையோ அல்லது படையினரையோ அகற்ற நடவடிக்கை எடுக்கமாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.