தாழ்நில பகுதிகளில் வாழும் மக்கள் மற்றும் மீனவா்களுக்கு அவசர எச்சாிக்கை..!

ஆசிரியர் - Editor I
தாழ்நில பகுதிகளில் வாழும் மக்கள் மற்றும் மீனவா்களுக்கு அவசர எச்சாிக்கை..!

யாழ்.வடமராட்சி கிழக்கு மற்றும் முல்லைத்தீவு, திருகோணமலை ஆகிய பகுதியில் நாளை கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதால் தாழ்நில பகுதிகளில் வாழும் மக்கள் எச்சாிக்கையுடன் இருக்குமாறு யாழ்.பல்பல்கலைகழக பு வியியல்துறை சிரேஸ்ட விாிவுரையாளா் நா.பிரதீபராஜா கூறியுள்ளாா். 

இது தொடா்பாக அவா் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள தகவலாவது, 

இலங்கைக்கு மேலே உள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக நாடு முழுவதும் பரவலாக மிதமானது முதல் கனமழை கிடைத்து வருகிறது. இம்மழை எதிர்வரும் டிசம்பர் 03 வரை தொடரும். இருப்பினும் இது இன்று நள்ளிரவு அல்லது அதிகாலை முதல் 

மிகக் கனமழையாக மாறி நாளை நண்பகல் வரை கனமழையாகவே நீடிக்க வாய்ப்புள்ளது. நாளை(30.11.2019) வடமராட்சி கிழக்கு, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை பகுதிகளில் மிகக் கனமழை கிடைக்க வாய்ப்புள்ளது.  தாழ்வான பகுதிகளில் குடியிருக்கும் மக்கள் அவதானத்துடன் இருப்பது சிறந்தது. 

அதேவேளை அடுத்த இரண்டு நாட்களுக்கு வடக்கு கிழக்கு மாகாண கடற்பகுதிகளில்  அலைகளின் உயரம் அதிகரித்து காணப்படும். மீனவர்கள் கடலுக்கு செல்வது ஆபத்தானதாகும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு