திருகோணமலை மாணவர் படுகொலை: மீண்டும் வலியுறுத்தும் மன்னிப்புச்சபை
திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு நீதி கோரி சர்வதேச மன்னிப்புச் சபை புதிய பிரச்சாரமொன்றை முன்னெடுத்துள்ளது.
குறித்த ஐந்து மாணவர்களும் கடந்த 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், அன்று முதல் தற்போதுவரை, இந்தப் படுகொலைக்கு நீதி கோரி 'ட்ரிங்கோ பைவ்', 'Trinco Five' என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது.
இந்த நிலையில், புதிய மகஜர் ஒன்றில் கைச்சாத்திடும் பணிகளை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
இந்தப் படுகொலை தொடர்பில், இரண்டு பொலிஸ் விசாரணைக் குழுக்களும், ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றும் விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.
எனினும், சம்பவம் தொடர்பில் எவருக்கும் எதிராகவும் வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை.
இந்த நிலையில், குறித்த படுகொலை தொடர்பில் இலங்கை அரசாங்கம் ஆக்கபூர்வமான விசாரணைகளை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட தரப்பினருக்க எதிராக வழக்கு தொடர வேண்டும்.
இதனூடாக படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் குடும்பங்கள் நீதியைப் பெறலாம் என்று சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.<