இலங்கையின் உட்டகட்டமைப்பு மற்றும் புலனாய்வு கட்டமைப்புக்களை வலுப்படுத்த 450 மில்லியன் அமெரிக்க டொலர்..! இந்தியாவின் பரிசு..

ஆசிரியர் - Editor I
இலங்கையின் உட்டகட்டமைப்பு மற்றும் புலனாய்வு கட்டமைப்புக்களை வலுப்படுத்த 450 மில்லியன் அமெரிக்க டொலர்..! இந்தியாவின் பரிசு..

இலங்கையின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக இலங்கைக்கு 400 மில்லியன் டொலர்கள் கடன் அத்தோடு, நாட்டின் உளவுத்துறையை மேலும் வலுப்படுத்த இலங்கைக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடன் வழங்கத் தயார் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷயுடன் கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இந்திய பிரதமர் நரேந்திர மோடி மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் நல்லிணக்க நடைமுறையொன்று, இலங்கையில் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்ப்பதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.அத்தோஇந்தியா, இலங்கையின் மிகவும் நெருக்கமாக நண்பன். 

இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ், இலங்கையில் 14,000 வீடுகளை நிர்மாணித்துள்ளோம். இன்று, நாங்கள் இரு நாடுகளினதும் பாதுகாப்புக் குறித்து கலந்துரையாடினோம். இந்தியாவும், பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடியது. 

ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று இலங்கை மீது நடத்தப்பட்ட தாக்குதலை, நாங்கள் கண்டிக்கிறோம்.“மேலும், இலங்கையின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக இலங்கைக்கு 400 மில்லியன் டொலர்கள் கடன் அத்தோடு, 

நாட்டின் உளவுத்துறையை மேலும் வலுப்படுத்த, இலங்கைக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடன் வழங்கத் தயார் எனவும், பிரதமர் தெரிவித்தார்.தனது பதவிக் காலப்பகுதியில் இந்திய இலங்கை உறவை மிக உயர்ந்த மட்டத்திற்கு 

கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ​கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு