தமிழீழ விடுதலை புலிகளால் மறைத்துவைக்கப்பட்ட பெருமளவு பற்றரிகள் மீட்பு..!

தமிழீழ விடுதலை புலிகளால் மறைத்துவைக்கப்பட்டதாக நம்பப்படும் சுமார் 130 பற்றரிகள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
திருகோணமலை அலஸ்தோட்டப்பகுதியில் நிலத்தில் கொங்ரீட் போட்டு மறைத்து வைத்திருந்த நிலையில் தம்மால் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட பற்றரிகளில் சிறியவை 40 உம் பெரியவையாக 90 உம் காணப்பட்டதாகத் தெரிவித்தனர் .
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.