SuperTopAds

மலையகத்தில் மாவீரர் நாள் நினைவேந்தலை ஒழுங்கமைத்த இரு இளைஞர்கள் கைது..!

ஆசிரியர் - Editor I
மலையகத்தில் மாவீரர் நாள் நினைவேந்தலை ஒழுங்கமைத்த இரு இளைஞர்கள் கைது..!

தமிழீழ மாவீரர் நாள் நினைவேந்தலை மலையகத்தில் ஒழுங்கமைப்பு செய்த இரு இளை ஞர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

அட்டன் – பொகவந்தலாவ பொலிஸாரினால் இவர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டனர்.

மாவீரர் தினத்தை முன்னிட்டு விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடைய புகைப்படத்தைக் கொண்ட துண்டுபிரசுத்தை 

பொகவந்தலாவ நகரம் மற்றும் சில தோட்டபகுதிகளில் வநியோகம் செய்து கொண்டிருந்த நிலையில் தகவல் பொலிஸாருக்கு கிடைத்தது.

விரைந்து சென்ற பொலிஸார் சந்தேக நபர்களைக் கைது செய்ததோடு இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உள்ளனர்.