வெள்ளை வாகனத்தில் கடத்தப்பட்ட சுவிஸ் துாதரக பணியாளா்..! நாட்டைவிட்டு எத்தனைபோ் வெளியேறவுள்ளா்..? கடத்தல்காரா்கள் கேள்வி..

ஆசிரியர் - Editor I
வெள்ளை வாகனத்தில் கடத்தப்பட்ட சுவிஸ் துாதரக பணியாளா்..! நாட்டைவிட்டு எத்தனைபோ் வெளியேறவுள்ளா்..? கடத்தல்காரா்கள் கேள்வி..

சுவிஸ் நாட்டு துாதரக பணியாளா் ஒருவா் வெள்ளை வாகனத்தில் கடத்தப்பட்டு பின்னா் வாகனத் திலிருந்து துக்கி வீசப்பட்ட சம்பவம் தொடா்பில் பல அதிா்ச்சி தகவல்கள் வெளியாகியிருக்கின்ற து. மேலும் குறித்த பணியாளா் பல மணி நேரம் கடத்தல்காரா்களால் விசாாிக்கப்பட்டுள்ளாா். 

அவரது கைத்தொலைபேசியின் தரவுகளை பெற்றுவிட்டு, அவரை வாகனத்தில் இருந்து தள்ளி வி ட்டு சென்றுள்ளதாக சுவிற்சர்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுவிற்சர்லாந்து வெ ளியுறவுத்துறையும் இந்த சம்பவத்தை உறுதிசெய்துள்ளது.

கடத்தப்பட்ட பெண்ணிடம், தூதரகம் தொடர்பான தகவல்களை வெளியிடுமாறு வெள்ளை வாகன குழு கட்டாயப்படுத்தியதாக சுவிற்சர்லாந்து வெளியுறவுத்துறை தெரிவித்ததாக சுவிஸ்ஃபோ செய்தி வெளியிட்டுள்ளது. சுவிட்சர்லாந்து உடனடியாக இந்த சம்பவத்தை 

இலங்கை அதிகாரிகளிடம் தெரிவித்ததுடன், சம்பவம் குறித்து உடனடி மற்றும் முழுமையான விசாரணையை கோருகிறது என்று அமைச்சின் செய்தித் தொடர்பாளர் பியர்-அலைன் எல்ட்சிங்கர் தெரிவித்துள்ளார். இதேவேளை, சுவிட்சர்லாந்திற்கான இலங்கை தூதரும் 

பெர்னில் உள்ள அந்த நாட்டு வெளியுறவு அமைச்சகத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளார். வெள்ளைவாகன குழு எதை தேடியது என்பதை வெளியுறவுத்துறை வெளியிடவில்லை. எனினும், அண்மையில் இலங்கையிலிருந்து வெளியேறிய 

குற்றப்புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளர் நிஷாந்த டி சில்வா தொடர்பான தகவல்களையே கடத்தப்பட்டவரிடம் விசாரிக்கப்பட்டதாக நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன், சுவிற்சர்லாந்து விசாவிற்கு விண்ணப்பித்தவர்கள் தொடர்பான 

தகவல்களையும் அவர்கள் விசாரணை நடத்தி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நேற்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தனவிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.

இது குறித்து அரசாங்கத்திற்கு தெரியாது என அவர் பதிலளித்தார்  பதில் பொலிஸ்மா அதிபர் அறிக்கை மூலம் இந்த விடயத்தை தெளிவுபடுத்துவார் என்றும் குறிப்பிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு