யாழ்.மாநகரசபையின் 2020ம் ஆண்டுக்கான பாதீட்டுக்கு 21 உறுப்பினா்கள் எதிா்ப்பு..! பதவியை இழக்கிறாரா யாழ்.மாநகர முதல்வா்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரசபையின் 2020ம் ஆண்டுக்கான பாதீட்டுக்கு 21 உறுப்பினா்கள் எதிா்ப்பு..! பதவியை இழக்கிறாரா யாழ்.மாநகர முதல்வா்..

யாழ்.மாநகரசபையின் 2020ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு நியதிச்சட்டத்திற்கு எதிராக 21 உறுப்பினா்கள் வாக்களித்தபோதும், ஒதுக்கீட்டு நியதிச்சட்டம் நிறை வேற்றப்பட்டிருக்கின்றது. 

மாநகரசபையின் 2020ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு நியதிச்சட்டம் இன்று சபையில் சமா்பிக்கப்பட்டது. இதன்போது ஈழமக்கள் ஜனநாயக கட்சி மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணி ஆகிய இரு கட்சிகள்

தங்கள் எதிா்ப்பை வெளியிட்டனா். இதனடிப்படையில் வாக்கெடுப்பு விடப்பட்ட நிலையில் 16 உறுப்பினா்கள் ஆதரவாக வாக்களித்தபோதும், 21 உறுப்பினா்கள் எதிராக வழங்களித்தனா். மேலும் 7 உறுப்பினா்கள், 

சபைக்கு சமூகமளிக்கவில்லை. எனினும் மாநகர முதல்வருக்கு சட்டத்தால் உாி த்தாக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் நிதி ஒதுக்கீட்டு நியதிச்சட்டம் நிறைவேற் றப்பட்டிருக்கின்றது. 

இதனால் மாநகர முதல்வா் பதவியை இழக்க நோிடும் என கூறப்பட்டாலும் சட்டரீதியாக மாநகரசபையின் 2 வருடங்களுக்கான நிதி ஒதுக்கீட்டு நியதிச்சட்டங்களுக்கு 

பெரும்பான்மை உறுப்பினா்களின் ஆதரவு இல்லாவிட்டாலும் முதல்வருக்கு சட்டத்தால் உரித்தாக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் நிறைவேற்ற முடியும். எனினும் 3ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு நியதிச்சட்டத்திற்கு

பெரும்பான்மை உறுப்பினா்கள் ஆதரவளிக்காவிட்டால் முதல்வா் சட்டரீதியாக பதவியை இழக்கும் நிலை உருவாகும். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு