தடைகளை உடைத்து யாழ்.பல்கலைகழக வளாகத்தில் மாவீரர்களுக்கு நினைவேந்தல்..! உணர்வால் எழுந்த மாணவர்கள்..

ஆசிரியர் - Editor I

தமிழீழ மாவீரர் நாள் நினைவேந்தல் தடைகளை தாண்டி யாழ்.பல்கலைகழக வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவுதூபியில் நடைபெற்றுள்ளது. 

பல்கலைகழக வளாகத்திற்குள் மாணவர்கள் நுழைய கூடாது. என பல்கலைகழக நிர்வாகம் தடைவிதித்திருந்த நிலையில், 

இன்று காலை பல்கலைகழக வாயிலில் ஒன்றுகூடிய மாணவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். மாணவர்கள் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை

நடத்தியிருந்தும், தடுக்கப்பட்ட நிலையில் கதவை இழுத்து திறந்து உள்நுழைந்த மாணவர்கள் மாவீரர் நினைவுதூபியில் ஒன்றுகூடி 

மாவீரர்களுக்கான அஞ்சலிகளை செலுத்தினர். பல்கலைகழக சுற்றாடலில் பொலிஸார் குவிக்கப்பட்டு புலனாய்வாளர்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்பட்டபோதும், 

மாணவர்கள் தடைகளை உடைத்து மாவீரர்களுக்கு உணர்வுபூர்வமான அஞ்சலிகளை செலுத்தினர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு