SuperTopAds

தமிழ் மக்களின் அரசியல் தீா்வு, மற்றும் அடிப்படை பிரச்சினைகள், அபிவிருத்தி போன்றவற்றில் இணைந்து செயற்பட தயாா்..!

ஆசிரியர் - Editor I
தமிழ் மக்களின் அரசியல் தீா்வு, மற்றும் அடிப்படை பிரச்சினைகள், அபிவிருத்தி போன்றவற்றில் இணைந்து செயற்பட தயாா்..!

தமிழ் மக்களின் அரசியல் தீா்வு மற்றும் அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்டோா் விடயம், காணி விடுவிப்பு, வேலைவாய்ப்பு, அபிவிருத்தி பணிகள் போன்றவற்றில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுடன் இணைந்து செயற்பட தமிழ்தேசிய கூட்டமைப்பு தயாா்.

மேற்கண்டவாறு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் ஊடக பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளாா். யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

புதிய அரசு சரியான நடவடிக்கைகளை எடுக்கும் போது நாம் அவற்றுக்கு எதிப்புத் தெரிவிக்கமாட்டோம்.ஏற்கனைவே இடைநடுவில் நிற்கும் புதிய அரசியலமைப்புத் தயாரிப்பை முன்னெடுக்க அரசு நடவடிக்கை எடுத்தால் நாம் ஆதரவளிப்போம்.

அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ளதாக்குவதற்கு அவர்கள் இந்தியாவுக்கு முன்னர் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தால் நாம் ஆதரவளிப்போம்.புதிய அரசின் ஒவ்வொரு செற்பாட்டையும் அவதானித்து ஆதரவளிப்பதா எதிர்ப்பதா 

என்று முடிவெடுப்போம். எமது பிரச்சினைகள் தொடர்பில் நாம் ஏற்கனவே முன்வைத்துள்ளோம். அவை தொடர்பில் புதிய அரசுக்கும் தெரியும். அரசியல் தீர்வு பிரதானமானது. அன்றாடப்பிரச்சினைகளும் மிக முக்கியமானவை.

மிக முக்கியமான விடயங்கள் மூன்றை முன்வைத்துள்ளோம். அவற்றுக்குத் தீர்வு காணப்படவேண்டும். இன்னும் பலவற்றுக்குத் தீர்வு காணப்படவேண்டும். அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படவேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு நீதி துரிதமாகக் கிடைக்கவேண்டும். குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டோரில் ஒவ்வொருவருக்கும் என்ன நடந்தது எனக் கண்டறியப்படவேண்டும். 

அவர்களது உறவினர்களின் வாழ்க்கை காலதாமதமின்றி முன்னெற்றப்படவேண்டும். இராணுவத்தினரின் பிடிக்குள் தற்போதும் இருக்கும் பொதுமக்களின் காணிகள் விடுவிகப்படவேண்டும். அத்துடன், 

எமது இளையோரின் வேலைவாய்ப்பு மற்றும் அபிவிருத்தியும் மிக முக்கியமான விடங்களாகவும். அவற்றுக்கும் நாம் புதிய அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்றார்.