SuperTopAds

சிங்கள மக்களின் மனங்களில் சந்தேகம் உண்டாகும்படி நடக்காதீா்கள்..! தமிழ், முஸ்லிம் மக்களை எச்சாிக்கிறாா் ஜனாதிபதி கோட்டா..

ஆசிரியர் - Editor I
சிங்கள மக்களின் மனங்களில் சந்தேகம் உண்டாகும்படி நடக்காதீா்கள்..! தமிழ், முஸ்லிம் மக்களை எச்சாிக்கிறாா் ஜனாதிபதி கோட்டா..

சிங்கள மக்களின் மனங்களில் சந்தேகத்தை உண்டாக்கும் வகையில் எந்தவொரு சந்தா்ப்பத்திலு ம் நடந்து கொள்ளவேண்டாம். என தமிழ், முஸ்லிம் மக்களை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச கோாிக்கை விடுத்துள்ளாா். 

சிறுபான்மையின மக்கள் அவ்வாறு நடந்து கொண்டால் பெரும்பான்மை சமூகம் எதிர்வினையாற்றும். அதை சிறுபான்மையினர் புரிந்து கொள்ள வேண்டும்.இலங்கையில் பிறந்தால் எல்லோரும் இலங்கை குடிமக்களே . 

அவர்களுக்கு எல்லோருக்கும் சம உரிமை உண்டு. ஆனால் சிறுபான்மையினர் சில விஷயங்களைச் செய்யக்கூடாது. அவர்கள் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் என ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவின் பாரத் சக்தி செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலின் போது இந்த விடயத்தை குறிப்பிட்டார். இறுதிக்கட்ட போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில்,

போர் இலகுவில் செய்து முடிக்கக்கூடிய விசயமல்ல. உள்நாட்டில் சண்டையிட்டாலும் அல்லது அமெரிக்கர்கள் ஈராக்கிற்கோ அல்லது ஆப்கானிஸ்தானிற்கு சென்றோ அல்லது இங்கிலாந்து அரசு ஈராக் அல்லது ஆப்கானிஸ்தானிற்கு சென்றோ சண்டையிடுகிறார்கள் 

என்பது ஒரு வசதியான விஷயம் அல்ல. அது உள்நாடாக இருந்தாலும் அல்லது வெளிநாட்டிலாக இருந்தாலும், போர் ஒரு சிக்கலற்ற, இலகுவான விஷயம் அல்ல. எல்லாமே மிகவும் சுமூகமாக நடக்காது. நாங்கள் ஒரு ஏழை நாடு, சிறிய நாடு. 

எனவே எங்கள் விஷயங்கள் தூக்கி அதைச் செய்வது மிகவும் நியாயமற்றது, ஏனென்றால் ஒரு தேசமாக நாம் பௌத்தர்களாக இருக்கிறோம். நாங்கள் மிகவும் அமைதியான தேசமாக இருக்கிறோம். நமது வரலாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழைமையானது. 

நம் மதிப்புகள் உள்ளன, நமது கலாச்சாரம் வளமானது.எனவே விமர்சிப்பதை விட, இந்த விஷயங்களை மறக்குமாறு தமிழ் புலம்பெயர்ந்தோரைக் கூட நான் கேட்டுக்கொள்கிறேன். இதை பேசிக் கொண்டிருப்பதால் யாருக்கும் பயனில்லை. 

மாறாக, நம் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.