தங்கத் தலைவனுக் 65 வது அகவை வாழ்த்துக்கள்...
தேசியத் தலைவன் பிரபாகரனின் அகவை அறுபத்தைந்து...
தலைவா தலைவா இன் றெமக்குத் திருநாளே - உலகில்
குனிந்த தமிழன் நிமிர்ந் தெழுந்தான் உன்னாலே
தலைவா தலைவா தமிழின் தேசியத் தலைவா
வேலுப்பிள்ளை பிரபாகரா
விடியலின் ஒளியே சூரியக் கதிரே
வாழிய வாழியவே
இன்றொரு சரித்திரம் வென்றெழுதி நின்றாய்
அன்பெனும் அறமும் அருளியே தந்தாய்
களமுனை போரில் அற நெறி நின்றே
ஆதித் தாயகம் வென்றே காத்தாய்
விடுதலை ஒளியே விசைப் புயல் கனலே
மறக்குலத் தோன்றலே வாழிய வாழியவே
மார்கழி குளிரில் பார்வதி மடியில்
மகவென உதித்த, வேலுப்பிள்ளை பிரபாகரனே
தமிழரின் தேசியத் தலைவனே வாழிய வாழியவே
இறைவன் ஒருவனை இதுவரை தேடினோம்
ஒருவனல்ல இருவரென உன்னையும் தேடுகிறோம்
இறப்பில்லை பிறப்பில்லை இனி உனக்கு
இன்னொரு பிறவியும் வேண்டாம் எதற்கு
உன் போல் ஆகுமோ அவன் பிறப்பு !
உன்னால் உயர்ந்தோம் உன்னால் வாழ்கிறோம்
தலைவா தலைவா இன்றுன் திருநாளே
அகிலம் போற்றும் அகவை அறுபத்தைந்து
ஆனந்த திரு நாளே
தேசியத் தலைவா தேடலின் இறையே
தமிழர் குலச் சாமியே தனிப் பெருந்தகையே
வங்கக் கடலும் வந்து வணங்கும்
நின் புகழ் பாடுகின்றோம்
வையகம் உய்திட நீ வாழிய வாழியவே
எங்கள் பிரபாகரனே வாழிய வாழியவே
பாவலர் வல்வை சுயேன்.