இந்திய பயணத்திற்கு முன்பே சீனாவை எதிர்க்கும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச..
கீழைத்தேய கடல் மார்க்கத்தின் முக்கிய அமைவிடமாகவும், பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகவும் உள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்தினை 99வருட குத்தகைக்கு வழங்கியதன் மூலம் அரசாங்கம் தவறிழைத்துள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு வழங்கிய ஒப்பந்தம் தொடர்பில் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.