700 பேர் நாட்டைவிட்டு வெளியேற தடை..! கண்காணிப்பும் தீவிரம்..

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் 700 உத்தியோகஸ்த்தர்களின் பெயர் விபரங்கள் சகல விமான நிலையங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன், தீவிரமாக கண்காணிக்கப்படு வதாக பொலிஸ் பேச்சாளர் ருவாண் குணசேகர கூறியுள்ளார்.
700 பேரின் பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியலொன்றை கொழும்பு விமானநிலையத்தின் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.குறிப்பிட்ட பட்டியலில் உள்ள எவராவது நாட்டிலிருந்து
வெளியேற முயன்றால் பொலிஸாருக்கு தகவல்தருமாறு குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்கள்
தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டிருந்த நிசாந்த சில்வா விமானநிலையத்தின் ஊடாக நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையிலேயே கண்காணிப்பு பணிகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.மேலும் பலர் நாட்டிலிருந்து வெளியேறலாம் என
காவல்துறையினர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.