நாளை நள்ளிரவுக்கு பின் க.பொ.த சாதாரணதர மாணவா்களுக்கு வகுப்புக்கள், செயலமா்வுகளை நடாத்த தடை..!

ஆசிரியர் - Editor I
நாளை நள்ளிரவுக்கு பின் க.பொ.த சாதாரணதர மாணவா்களுக்கு வகுப்புக்கள், செயலமா்வுகளை நடாத்த தடை..!

க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் நடைபெறவுள்ள நிலையில் நாளை நள்ளிரவுக்கு பின்னா் க.பொ.த சாதாரண தர மாணவா்களுக்கு விசேட வகுப்புக்கள், செயலமா்வுக ளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. 

இந்த தடையை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் விதித்துள்ளதுடன் மீறுவோா் மீ து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சாிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான முறைப்பாடுகளை பொதுமக்கள் காவற்துறையினர் 

அல்லது பரீட்சைகள் திணைக்களத்தின் அவசர தொலைபேசி இலக்கமான 1911 எனும் எண்ணுக்கு அழைப்பினை ஏற்படுத்தி அறிவிக்கமுடியும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, 

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கான அனுமதி பத்திரம் கிடைக்க பெற்றுள்ள விண்ணப்பதாரிகளுக்கு தாம் கோரிய பாடம் மற்றும் பாட எண்ணில் மாற்றங்கள் இருப்பின் அது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்திற்கு 

அறிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கல்விப் பொதுத்தராதார சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதுடன், குறித்த பரீட்சைக்கு இம்முறை 

7 இலட்சத்து 17 ஆயிரத்து 8 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு