பழிவாங்கல் உச்சமடைகிறது..! குற்றப்புலனாய்வு திணைக்கள பணிப்பாளரை கைது செய்யுமாறு போா் கொடி..

ஆசிரியர் - Editor I
பழிவாங்கல் உச்சமடைகிறது..! குற்றப்புலனாய்வு திணைக்கள பணிப்பாளரை கைது செய்யுமாறு போா் கொடி..

மஹிந்த ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற பல்வேறு கொலைகள், கடத்தல்களை கண்டு பிடித்து உண்மைகளை வெளிப்படுத்திய குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன் னாள் பணிப்பாளரை கைது செய்யுங்கள். 

மேற்கண்டவாறு தாய்நாட்டுக்கான இராணுவ அமைப்பு கோரியுள்ளது. அந்த அமைப்பின் இணைப்பாளர் சட்டத்தரணி ஓய்வு நிலை மேஜர் அஜித் பிரசன்ன இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

பல்வேறுப்பட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள ஷானி அபேசேகர, நாட்டிலிருந்து தப்பிச் செல்வதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுடன் விசாரணைகளை மேற்கொண்ட பிரதான காவற்துறை பரிசோதகர் நிஷாந்த டி சில்வா நேற்று தமது குடும்பத்தாருடன் 

ரகசியமாக சுவிசர்லாந்துக்கு தப்பிச் சென்றுள்ளார்.நேற்று மதியம் 12.50 அளவில் அவர் சுவிஸ் வான் சேவைக்கு சொந்தமான டப்ளிவ்.கே 0065 ரக வானுர்தியில் சுவிசர்லாந்து நோக்கி பயணித்துள்ளதாக 

எமது கட்டுநாயக்க வானுர்தி தள செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.அவர் ஷானி அபேசேகரவின் ஆலொசனைக்கiமைய சர்சைக்குரிய பல சம்பங்கள்; தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்திருந்தார்.

அத்துடன் அவர்களுக்கு எதிராக பல்வேறுப்பட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள தருணத்தில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதான காவற்துறை பரிசோகர் நிஷாந்த டி சில்வா ரகசியமாக வெளிநாடு தப்பிச் சென்றுள்ளார்.

காவற்துறை தலைமையகத்தின் அனுமதியின்றி அவர் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளரும் காவற்துறை அத்தியட்சகருமான ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு