நாட்டைவிட்டு தப்பி ஓடிய குற்ற விசாரணை பிாிவு பொறுப்பதிகாாி..! நையாண்டி செய்த ஜனாதிபதி..

எங்களுக்கு எதிராக விசாரணைகளை நடாத்திய குற்ற விசாரணை பிாிவின் பொறுப் பதிகாாி நிஷாந்த டி சில்வா ஜெனீவாவுக்கு சென்றிருக்கவேண்டும். என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச நையாண்டியாக கூறியுள்ளாா்.
பெல்லன்வில ரஜமகா விகாரைக்கு நேற்று சென்றிருந்த கோத்தாபய ராஜபக்ச அங்கு, விகாராதிபதி மற்றும் பௌத்த பிக்குகளுடன் உரையாடும் போது இதுபற்றி தகவல் வெளியிட்டுள்ளார். எங்களுக்கு எதிராக விசாரணைகளை
மேற்கொண்ட நிசாந்த சில்வா நாட்டைவிட்டு வெளியேறியதாக இன்று நான் கேள்விப்படுகிறேன். அவர் ஜெனிவாவுக்குச் சென்றிருக்க வேண்டும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.