கத்தியை காட்டி சுகாதார தொழிலாளியை அச்சுறுத்திய மீன் வியாபாாி..! அதிரடியாக கைது. சுன்னாகம் சந்தையில் பரபரப்பு..
யாழ்.சுன்னாகம் சந்தையில் சுகாதார தொழிலாளிக்கு கத்தியை காட்டி அச்சுறுத்திய மீன் வியாபாாியை பொலிஸாா் கைது செய்துள்ளனா்.
இந்தச் சம்பவம் இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றது.சுன்னாகம் மீன் சந்தையில் கழிவகற்றல் பணியில் சுகாதாரத் தொழிலாளி ஈடுப்பட்டுள்ளார்.
இதன்போது வியாபாரி ஒருவர் கழிவகற்றல் ஒழுங்காக நடைபெறுவதில்லை என்று தொழிலாளியிடம் கேட்டுள்ளார்.
அதனால் இருவருக்கும் இடையே இடம்பெற்ற முறுகல் நிலையையடுத்து தொழிலாளிகள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவத்தை அறிந்த வலி.தெற்கு பிரதேச சபைத் தவிசாளர், சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்குச் சென்றார்.
அங்கு சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்பட்டது.சுன்னாகம் மீன் சந்தைக்குச் சென்ற பொலிஸார், வியாபாரியை கைது செய்து இழுத்துச் சென்றனர் என்று
சந்தையில் கூடியிருந்தவர்கள் தெரிவித்தனர். சம்பவத்தையடுத்து சுகாதாரத் தொழிலாளிகள் கடமையை இடைநிறுத்திவிட்டுச் சென்றுள்ளனர்.
சுன்னாகம் மீன் சந்தையில் ஒழுங்குமுறையில் கழிவகற்றல் இடம்பெறுவதில்லை. பணியை ஒழுங்காகச் செய்யலாமே என்று கேட்டேன்.
அப்போது எனது கையில் மீன்வெட்டும் கத்தி இருந்தது. அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் ஒழுங்கான கழிவகற்றலை உறுதி செய்யவில்லை.
என்று பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மீன் வியாபாரி தெரிவித்தார்.